×

இலங்கை அரசாங்கத்துக்கு உதவத் தயார்; முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள்

இலங்கை ராணுவம் என்னை தொடர்பு கொண்டு எங்கள் யுக்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டார்கள். அதை பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் நான் பெரிய ஆபத்தை சந்திக்க நேரும் இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, அந்நாடு சந்தித்து வரும் அச்சுறுத்தலை கட்டுக்குள் கொண்டுவர தங்களுக்கு தெரிந்த யுக்திகளை பகிர்ந்துகொள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் தயாராக உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான
 

இலங்கை ராணுவம் என்னை தொடர்பு கொண்டு எங்கள் யுக்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டார்கள். அதை பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் நான் பெரிய ஆபத்தை சந்திக்க நேரும்

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, அந்நாடு சந்தித்து வரும் அச்சுறுத்தலை கட்டுக்குள் கொண்டுவர தங்களுக்கு தெரிந்த யுக்திகளை பகிர்ந்துகொள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் தயாராக உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி இதுகுறித்து பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், சர்வதேச ரீதியில் செயல்படுகின்ற பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை அரசிடம் திட்டங்கள் ஏதும் கிடையாது. யுத்த காலத்தின்போது இருந்த பாதுகாப்பு நடவடிக்கை தளர்த்தப்பட்டதே இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு முக்கியமான காரணம். இலங்கையில் திடீர் செல்வந்தர்கள் பலர் உருவாகியிருக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அவர், இலங்கை ராணுவம் என்னை தொடர்பு கொண்டு எங்கள் யுக்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டார்கள். அதை பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் நான் பெரிய ஆபத்தை சந்திக்க நேரும்.

எனவே, இலங்கை அரசாங்கம் நேரடியாக கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு யுக்திகளை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயார் என அவர் உறுதியளித்தார்.