×

இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றவருக்கு உயர் பதவி தருகிறார் கோத்தபயே ராஜபக்சே ..!

நல்ல நேரம் பார்த்து அனுராதபுரம், ருவன்வேலி சேயா மகாஸ்தூபி அருகே அதிபராகப் பதவியேற்றார் கோத்தபயே ராஜபக்சே .தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர் குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபயே ராஜபக்சே 1983-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி டிஃபன்ஸ் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நல்ல நேரம் பார்த்து அனுராதபுரம், ருவன்வேலி சேயா மகாஸ்தூபி அருகே அதிபராகப் பதவியேற்றார் கோத்தபயே ராஜபக்சே .தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர் குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபாய ராஜபக்ச
 

நல்ல நேரம் பார்த்து அனுராதபுரம், ருவன்வேலி சேயா மகாஸ்தூபி அருகே அதிபராகப் பதவியேற்றார் கோத்தபயே ராஜபக்சே .தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர் குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபயே ராஜபக்சே 1983-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி டிஃபன்ஸ் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

நல்ல நேரம் பார்த்து அனுராதபுரம், ருவன்வேலி சேயா மகாஸ்தூபி அருகே அதிபராகப் பதவியேற்றார் கோத்தபயே  ராஜபக்சே .தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர் குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபாய ராஜபக்ச 1983-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி டிஃபன்ஸ் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

பதவி ஏற்ற உடன் அவர் விடுத்திருக்கும் செய்தியில் , நான் பெரும்பான்மையான சிங்கள புத்த மதத்தினர் வாக்குகளால்தான் வெற்றி பெற்றேன் என்று எனக்குத் தெரியும்.எனக்கு வாக்களிக்காத சிறுபான்மை மக்களுக்கும் நான்தான் அதிபர். என்னோடு சேருங்கள். புத்தமதத்துக்கு முன்னுரிமை அளித்தாலும்,மற்ற மதத்தினரையும் பாதுகாப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

விடுதலை புலிகளோடு நடந்த இறுதிப் போரின்போது சூசை,பிரபாகரன் போன்ற தலைவர்களைக் கொன்ற 53 வது படைப்பிரிவின் தலைவராக இருந்த கமல் குணரத்னவை இளங்கையின் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப் போகிறார் கோத்தபயே  ராஜபக்சே  என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

அதே சமையம்,சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெங் ஷாங்,கோத்தபயே  ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு,இலங்கையும் சீனாவும் எப்போதும் பரஸ்பர நட்பு நாடுகளாகவே செயல்படும் என்று ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். ரனில் ராஜினாமா செய்ததும் மீண்டும் மகிந்த ராஜபக்சே  பிரதமர் ஆவார் என்றும் பேசப்படுவதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களான இந்து மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள்,கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் அனைவரும் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர்.

இலங்கையில் இப்பொது வலிமையான சிங்களப் பெரும்பான்மை அரசு அமைந்திருப்பது இந்தியாவுக்கும் கவலை அளிக்கும் செய்தியே.இந்தியாவைக் காட்டி சீனத்திடமும்,சீனாவைக்காட்டி இந்தியாவிடமும் இலங்கை அரசு நினைத்ததைச் சாதித்துக்கொள்ளும் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.