×

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது. இதையடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற் கரை பகுதிகளை சுனாமி தாக்கியது.
 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது. இதையடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற் கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்கு பகுதியில் 17 கி.மீ (10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.8 என பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாலு நகரத்தில் இருந்து வெகு தூரத்தில் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இதே சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது, இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எனினும், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 6 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

ஹசாரா இன மக்களை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு; பாக்.,-கில் 16 பேர் பலி!