×

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை!

ரிக்டர் அளவுகோலில் சுமார் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் மொலுக்காஸ் பகுதியையொட்டிய கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 45 கிமீ ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கத்தால் சுலாவசி தீவிலும் நிலநடுக்கம் தொடர்பாக அறிகுறிகள் தென்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் சுமார் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மனாடோ நகர் உள்ளிட்ட பல பகுதியிலிருந்தும் மக்கள் வீடுகளை
 

ரிக்டர்  அளவுகோலில் சுமார் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில்  மொலுக்காஸ் பகுதியையொட்டிய கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 45 கிமீ ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கத்தால் சுலாவசி தீவிலும் நிலநடுக்கம் தொடர்பாக அறிகுறிகள் தென்பட்டுள்ளது.  ரிக்டர்  அளவுகோலில் சுமார் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால்  மனாடோ நகர் உள்ளிட்ட பல பகுதியிலிருந்தும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்  எதிரொலியாக இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் 5 ரிக்டர் அளவுக்கு நேற்றிரவு  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.