×

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா மார்ச் 16-ஆம் தேதி முதல் நிறுத்தம்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா மார்ச் 16-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. டெல்லி: இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா மார்ச் 16-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 5436-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் கடந்துள்ளது. அத்துடன் இதுவரை உலகில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட
 

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா மார்ச் 16-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.

டெல்லி: இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா மார்ச் 16-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 5436-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் கடந்துள்ளது. அத்துடன் இதுவரை உலகில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு பயணிகளை தடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கப்படுவது மார்ச் 16-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் அறிவித்துள்ளன.