×

இந்தியருக்கு விழுந்த ரூ. 29 கோடி பரிசு : வலைவீசி ஆளை தேடும் லாட்டரி நிறுவனம்!

மாதந்தோறும் நடக்கும் குலுக்கலில் இதுவரை பல இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அபுதாபி: ரூ.29 கோடி பரிசு பெற்ற இந்தியரை துபாய் லாட்டரி நிறுவனம் தேடி வருகிறது. துபாய் அபுதாபியில் பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் மிகவும் பிரபலமானது. இதில் மாதந்தோறும் நடக்கும் குலுக்கலில் இதுவரை பல இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். கடந்த மாதம் இந்த லாட்டரி குலுக்கலில் முகமது பயஸ் என்பவர் ரூ. 23 கோடி பரிசு வென்றார். இந்நிலையில் பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் சார்பில் நேற்று நடந்த
 

மாதந்தோறும் நடக்கும் குலுக்கலில் இதுவரை பல இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

அபுதாபி:  ரூ.29 கோடி பரிசு பெற்ற இந்தியரை துபாய் லாட்டரி நிறுவனம் தேடி வருகிறது.

துபாய் அபுதாபியில்   பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் மிகவும் பிரபலமானது. இதில் மாதந்தோறும் நடக்கும் குலுக்கலில் இதுவரை பல இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். கடந்த மாதம் இந்த லாட்டரி குலுக்கலில் முகமது பயஸ் என்பவர் ரூ. 23 கோடி பரிசு வென்றார்.

இந்நிலையில்  பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம்  சார்பில்  நேற்று நடந்த குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 28,86,62,884 கோடி ரூபாயாகும். 

இதில் என்ன கொடுமை என்றால், பரிசு  விழுந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயரை தொடர்புக்கொள்ள  முடியவில்லை. அவருடைய செல்போனுக்கு அழைத்தால் வேறுறொருவர் போனை  எடுப்பதாக தெரிகிறது. இதனால் கேரளாவை சேர்ந்த அந்த நபரை பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் தேடி  வருகிறது.