×

இந்திய வம்சாவளி பெண் கொடூர கொலை: சூட்கேஸில் உடலை அடைத்து வைத்த பயங்கரம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் ப்ரீத்தி ரெட்டி காணாமல் போன நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிட்னி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் ப்ரீத்தி ரெட்டி காணாமல் போன நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி ரெட்டி. பல் மருத்துவரான இவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி காணாமல் போனார். கடந்த ஞாயிறன்று காலை பல்மருத்துவ மாநாட்டில் பங்கேற்க ப்ரீத்தி சென்றுள்ளார். அதன் பின்
 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர்  ப்ரீத்தி ரெட்டி காணாமல் போன நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சிட்னி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர்  ப்ரீத்தி ரெட்டி காணாமல் போன நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி ரெட்டி. பல் மருத்துவரான இவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி காணாமல் போனார். கடந்த ஞாயிறன்று காலை பல்மருத்துவ மாநாட்டில் பங்கேற்க ப்ரீத்தி சென்றுள்ளார். அதன் பின் 11மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசிய அவர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, ப்ரீத்தி காணாமல் போனதாக  அவரது குடும்பத்தினர் நீயூ சவுத் வேல்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ப்ரீத்தி ரெட்டியை போலீசார் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கடைசியாக ஞாயிறன்று ப்ரீத்தி ரெட்டி, ஜார்ஜ் சாலையில் உள்ள மெக்டொனால்ஸ் உணவகத்திற்கு வந்தது அங்குள்ள  சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார். இதனால் பிரீத்தியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரைண மேற்கொண்டுள்ளனர். எனினும், ப்ரீத்தி கிடைக்கவில்லை. 

இந்நிலையில், நேற்று  கிங்ஸ்ஃபோர்ட்டில் உள்ள ஸ்ட்ராசான் லேனில், ப்ரீத்தி கார் பார்கிங் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தபோது, காரின் உள்ளே இருந்த சூட்கேஸில் ப்ரீத்தியின் உடல் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக இருந்தது தெரியவந்தது. அதே சமயம் அவரது முன்னாள் காதலனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். எனவே இந்த சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.