×

இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல் போன்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்!

இங்கிலாந்து இளவரசர் ஹேரியின் மனைவி மேகன் மார்க்கல் போன்று தன்னுடைய முகத்தை மாற்றுவதற்காக அமெரிக்க பெண்மணி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது டெக்சாஸ்: இங்கிலாந்து இளவரசர் ஹேரியின் மனைவி மேகன் மார்க்கல் போன்று தன்னுடைய முகத்தை மாற்றுவதற்காக அமெரிக்க பெண்மணி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இளவரசர் சார்லஸ் மற்றும் டயனாவின் இரண்டாவது மகனான பிரிட்டன் ராஜக் குடும்பத்தைச் சேர்ந் இளவரசர் ஹேரியும் அமெரிக்க நடிகை
 

இங்கிலாந்து இளவரசர் ஹேரியின் மனைவி மேகன் மார்க்கல் போன்று தன்னுடைய முகத்தை மாற்றுவதற்காக அமெரிக்க பெண்மணி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

டெக்சாஸ்: இங்கிலாந்து இளவரசர் ஹேரியின் மனைவி மேகன் மார்க்கல் போன்று தன்னுடைய முகத்தை மாற்றுவதற்காக அமெரிக்க பெண்மணி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இளவரசர் சார்லஸ் மற்றும் டயனாவின் இரண்டாவது மகனான பிரிட்டன் ராஜக் குடும்பத்தைச் சேர்ந் இளவரசர் ஹேரியும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலும் ஒன்றரை வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அமெரிக்க தந்தைக்கும் ஆப்பிரிக்க தாய்க்கும் பிறந்தவர் மேகன் மார்க்கல். ’சூட்ஸ்’ என்ற அமெரிக்கத் தொடர்மூலம் பிரபலம் ஆனவர்.

தற்போது முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கிறார் பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்கல். மேகன் மார்க்கலுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில, மேகன் மார்க்கல் போன்று தன்னுடைய முகத்தை மாற்றுவதற்காக அமெரிக்க பெண்மணி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார். இந்திய மதிப்புப்படி ரூ.17.2 லட்சம் செலவு செய்து இந்த அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தை சேர்ந்த அப்பெண், மூன்று குழந்தைகளுக்கு தாயாவார்.

மேகன் மார்க்கலின் தீவிர ரசிகையான அவர், இந்த அறுவை சகிச்சை குறித்து கூறும்போது, மேகன் மார்க்கல் போன்று அப்படியே நான் இருக்கிறேனா என்பது தெரியவில்லை. ஆனால், அவரை போன்று உடல் அங்கங்களில் சில மாற்றங்கள் வந்துள்ளன. எனது மூக்கு அவரது மூக்கு போன்றுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எனினும், மேகன் மார்க்கலை பன்று இவர் இல்லை என நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

நடிகர் உள்பட உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள ஏராளமாக செலவு செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் இவ்வளவு செலவு செய்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.