×

இங்கிலாந்து அரசகுடும்பத்து குழப்பங்களுக்கு காரணம் ‘நிற வெறி’ காரணமா..? திகைக்க வைக்கும் பின்னணி..!

இங்கிலாந்தின் சரித்திரத்தில் இன்றைய இளைய இளவரசர் ஹாரிஸின் திருமணம் நிச்சயம் ஒரு புரட்சி! முதல் காரணம் அவரது மனைவி மேகன் மார்க்கெல் ஒரு அமெரிக்க நடிகை. அடுத்த காரணம் அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். மூன்றாவது முக்கியமான காரணம் மேகனின் தாய் டோரியா ராக்லாண்ட் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர், அதாவது கருப்பர்! இங்கிலாந்தின் சரித்திரத்தில் இன்றைய இளைய இளவரசர் ஹாரிஸின் திருமணம் நிச்சயம் ஒரு புரட்சி! முதல் காரணம் அவரது மனைவி மேகன் மார்க்கெல்
 

இங்கிலாந்தின் சரித்திரத்தில் இன்றைய இளைய இளவரசர் ஹாரிஸின் திருமணம் நிச்சயம்  ஒரு புரட்சி! முதல் காரணம் அவரது மனைவி மேகன் மார்க்கெல் ஒரு அமெரிக்க நடிகை. அடுத்த காரணம் அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். மூன்றாவது முக்கியமான காரணம் மேகனின் தாய் டோரியா ராக்லாண்ட் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர், அதாவது கருப்பர்!

இங்கிலாந்தின் சரித்திரத்தில் இன்றைய இளைய இளவரசர் ஹாரிஸின் திருமணம் நிச்சயம்  ஒரு புரட்சி! முதல் காரணம் அவரது மனைவி மேகன் மார்க்கெல் ஒரு அமெரிக்க நடிகை. அடுத்த காரணம் அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். மூன்றாவது முக்கியமான காரணம் மேகனின் தாய் டோரியா ராக்லாண்ட் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர், அதாவது கருப்பர்!

ஆனாலும் திருமணம் நடந்தது. அரண்மனை கட்டுத்திட்டங்களை மேகன் மதிப்பதில்லை என்பதால் அரண்மனையில் குழப்பங்கள் என்றும், ராணியின் இரண்டு மருமகள்களுக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் இங்கிலாந்து பத்திரிகைகள் கிசு கிசு வெளியிட்டன. அரண்மனை புரோட்டாகால் படி வெளியில் போகும்போது டிரைவர் காரை நிறுத்திவிட்டு வந்து கதவைத் திறக்கும் வரை அரசகுடும்பத்தினர் காத்திருக்க வேண்டும்.

மேகன் பொது இடங்களுக்குப் போகும்போது தானே கார் கதவைத் திறந்து இறங்க ஆரம்பித்ததே குற்றமாகப் பார்க்கப்பட்டது. அடுத்தது மேகன் ஒரு பொதுவிழாவில் சந்தித்த ஒரு பத்துவயது சிறுமி எதிர்காலத்தில் தான் ஒரு நடிகை ஆக வேண்டும் என்று சொன்னதும் அவரைக் கட்டிப்பிடித்து பாராட்டியது.ராஜ குடும்பத்தினர் கை கொடுக்க  மட்டுமே புரோட்டக்கால் அனுமதிக்கிறது. இப்படி சின்னச் சின்ன புரிதலின்மைகளால் ஏற்பட்ட பிளவுகள் பெரிதாக, தனது அரச குடும்ப பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும், அமெரிக்கா அல்லது கனடாவில் தங்கி, சொந்தமாக சம்பாதித்து வாழப்போவதாகவும் இளவரசர் ஹாரி அறிவித்து விட்டார். 

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து ராணி ஒரு இண்டர் நேஷனல் பஞ்சாயத்தைக் கூட்டி இருக்கிறார். அதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா பிரதமர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் புருடோவுக்கு இது முன்பே தெரியும் என்றும், அதனால்தான், அவர் சமீபத்திய நேர்முகம் ஒன்றில் இளவரசர் ஹாரி- மோகன் தம்பதியரை கனடாவுக்கு வரும்படி அழைத்திருந்தார் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

ஆனால்,யாரும் வெளியில் சொல்ல தயங்கும் இன்னொரு முக்கிய காரணமும் இதில் இருக்கிறது. மேகன் மார்கெலின் தந்தை வெள்ளையர், தாய் டோரியா கருப்பர், அதனால் இங்கிலாந்து ராஜ குடும்ப வாரிசாக கரிய நிறத்தில் ஒரு குழந்தை பிறந்துவிடும் வாய்ப்பு இருப்பதே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்கிற குற்றச்சாட்டும் எழத் துவங்கி இருக்கிறது!