×

ஆப்கனில் இரட்டை குண்டுவெடிப்பு; 20 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள இரட்டை குண்டுவெடிப்பில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தஸ்த்-இ-பர்ஷி பகுதியில் உள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்த பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, அதே பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும்
 

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள இரட்டை குண்டுவெடிப்பில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தஸ்த்-இ-பர்ஷி பகுதியில் உள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்த பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, அதே பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  அதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுபேற்கவில்லை. எனினும், இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

20 killed in a twin blast in afghanistan