×

அரசுப் பணியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி புதிய கட்சியை துவங்கினார்!

மத்திய அரசு முஸ்லீம் மக்களிடத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் புதிய கட்சியைத் துவங்கியுள்ளார். ஜம்மு: மத்திய அரசு முஸ்லீம் மக்களிடத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் புதிய கட்சியைத் துவங்கியுள்ளார். பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் 2009 ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஷா பைசல்.
 

மத்திய அரசு முஸ்லீம் மக்களிடத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் புதிய கட்சியைத் துவங்கியுள்ளார்.

ஜம்மு: மத்திய அரசு முஸ்லீம் மக்களிடத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் புதிய கட்சியைத் துவங்கியுள்ளார்.

பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல்

2009 ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஷா பைசல். பின்னர் மத்திய அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த இவர் கடந்த ஜனவரி மாதம்  தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு  காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் அசாதாரணமான அரசியல் கொலைகளைக் காரணம் காட்டிய அவர்,  அரசாங்கத்தில் முஸ்லீம்கள் ஓரங்கப்பட்டப்படுவதாகவும்  குற்றம் சாட்டினார்.

‘ஊழல் இல்லாத, தூய்மையான மற்றும் வெளிப்படையான’ அரசியல் !

தன்னுடைய ராஜினாமாவிற்குப் பிறகு மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்ட ஷா பைசல் அதற்காகத் தொடர்ந்து இளைஞர்களைச் சந்தித்து வந்தார். மேலும்  காஷ்மீரில் ‘ஊழல் இல்லாத, தூய்மையான மற்றும் வெளிப்படையான’ அரசியலை உருவாக்க முயன்றுவருவதாகக் கூறி இளைஞர்களை ஆதரவு கோரினார். 

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் இயக்கம்

இந்நிலையில், இன்று காலை ‘ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கியுள்ளார், இதன் ஸ்ரீநகரின் ராஜ்பாக் பகுதியில் கிண்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.