×

அரசியல் கட்சிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் வைத்த செக்!

ட்விட்டரில் இனி அரசியல் விளம்பரங்கள் செய்யக்கூடாது. இதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் தலைவர் ஜாக் அதிரடியாக அறிவித்துள்ளார். உலகெங்கிலும் இருக்கும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் பிரதான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பல புதிய வசதிகளை கொண்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது. பாலிவுட், ஹாலிவுட், இந்திய அரசியல், அமெரிக்கா அரசியல் என பலதரப்பட்ட நிர்வாகங்களும் இதில் கணக்கு வைத்துள்ளனர். ட்விட்டரில் இனி அரசியல் விளம்பரங்கள் செய்யக்கூடாது. இதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின்
 

ட்விட்டரில் இனி அரசியல் விளம்பரங்கள் செய்யக்கூடாது. இதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் தலைவர் ஜாக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

உலகெங்கிலும் இருக்கும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் பிரதான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பல புதிய வசதிகளை கொண்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது. பாலிவுட், ஹாலிவுட், இந்திய அரசியல், அமெரிக்கா அரசியல் என பலதரப்பட்ட நிர்வாகங்களும் இதில் கணக்கு வைத்துள்ளனர். 

ட்விட்டரில் இனி அரசியல் விளம்பரங்கள் செய்யக்கூடாது. இதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் தலைவர் ஜாக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

உலகெங்கிலும் இருக்கும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் பிரதான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பல புதிய வசதிகளை கொண்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது. பாலிவுட், ஹாலிவுட், இந்திய அரசியல், அமெரிக்கா அரசியல் என பலதரப்பட்ட நிர்வாகங்களும் இதில் கணக்கு வைத்துள்ளனர். 

இந்தியாவில் பல கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களே இணைய பிரச்சாரத்தின் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இணையதள பிரச்சாரம் இருந்தது. பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பாரதிய ஜனதா கட்சியின் விளம்பரங்கள் உச்சத்தில் இருந்தன. 

அதேபோல, 2016ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன. இதன் காரணமாக பல விமர்சனங்களையும் இவ்விரு நிறுவனங்கள் சந்திக்க நேரிட்டது. 

இந்நிலையில், இனி ட்விட்டரில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை, ஸ்பான்சர் லிங்குகளை போஸ்ட் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்து அதிரடி காட்டியிருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைவர் ஜாக். அரசியல் என்பது விளம்பரம் மூலம் வரக்கூடியது அல்ல, அரசியல் புகழை காசு கொடுத்து வாங்க கூடாது, அது தானாக மட்டுமே வர வேண்டும் என்றும் தனது இந்த அறிவிப்பிற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் ஜாக். 

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரவிருக்கும் அதிபருக்கான தேர்தலையொட்டி இந்த அதிரடி முடிவை அந்நிறுவனத்தின் தலைவர் எடுத்திருக்கிறார். ஆனால் எத்தகைய விமர்சனங்களை சந்தித்தாலும் பேஸ்புக் நிறுவனம் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தெரிகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த முடிவு அமெரிக்கா மட்டுமல்லாது இந்தியாவிலும் பல கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்தலும் இந்த இணைய பிரச்சாரத்தை நம்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரின் இந்த அதிரடி முடிவால் பல கட்சிகள் இன்றைய காலகட்ட இளைஞர்களை அணுகி வாக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.