×

அரசனாகவே இருந்தாலும் ஆறே மாதத்தில் அப்பாவாக முடியுமா?. அதிசயம் ;ஆனால் உண்மை

மலேசியாவின் 15 வது சுல்தான் சமீபத்தில் தனது இளம் ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்த செய்திகளின் பின்னால் உள்ள சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை. மலேசியாவின் 15 வது சுல்தான் சமீபத்தில் தனது இளம் ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்த செய்திகளின் பின்னால் உள்ள சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை. மலேசிய சுல்தான் முகமது 2018-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஓக்சானா லியேலோடினா என்கிற ரஷ்ய மாடல்
 

மலேசியாவின் 15 வது சுல்தான்  சமீபத்தில் தனது இளம் ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்த செய்திகளின் பின்னால் உள்ள சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை.

மலேசியாவின் 15 வது சுல்தான்  சமீபத்தில் தனது இளம் ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்த செய்திகளின் பின்னால் உள்ள சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை.

மலேசிய சுல்தான் முகமது 2018-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஓக்சானா லியேலோடினா என்கிற ரஷ்ய மாடல் அழகியைத் திருமணம் செய்து கொண்டாராம்.ஆனால்,அது மலேஷியாவில் விவாதத்துக்கு உரியதாக மாறியதும் மீண்டும் நவம்பரில் ரஷ்யாவில் வைத்து வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து சுல்தானின் இளம் மனைவி கற்பமாக இருக்கும் செய்தியும் பத்திரிகைகளில் செய்தியானதுகூடவே சுல்தான் மனைவியான ஓக்சானா வியோலொடினாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ரஷ்ய இணையத்தில் வெளியானது.

நவம்பரில் திருமணம் செய்துகொண்ட சுல்தானின் மனைவிக்கு மே 21-ம் தேதி குழந்தை பிறந்து விட்டது.அதாவது கல்யாணம் பண்ணிக்கொண்ட நாளிலிருந்து ஆறு மாதத்தில்! இதுவும் செய்தியான நிலையில், சுல்தான் முகமது தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதுடன்,தனது சுல்தான் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.

ஆனால் தனது மாடலிங் தொழிலுக்கே திரும்பிவிட்ட ஓக்சானா வியோலொடினாவோ தன் குழந்தையின் உடலில் ஓடுவது ராயல் ப்ளட்தான் என்றும்,சுல்தான் தங்கள் திருமணத்தை தாமதமாக அறிவித்ததுதான் இந்த குழப்பங்களுக்கு காரணம் என்றும் சொல்லி இருக்கிறார்!ஆக இந்தப்  பிரட்சினை இப்போதைக்கு முடியாதென்றே தோன்றுகிறது.