×

அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதி : அரச குடும்பம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இளவரசர் ஹாரியும், அவரது மனைவியும் விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரச குடும்ப பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவியும் விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரிட்டன் அரச குடும்பம் உலகிலேயே மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னமும் அவர்களுக்கான தனித்துவம் மாறவில்லை. இருப்பினும் கருத்துவேறுபாடு காரணமாக அரசகுடும்பத்திலிருந்து வெளியேற போவதாகவும், பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் என்றும் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும்
 

இளவரசர் ஹாரியும், அவரது மனைவியும் விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரச குடும்ப பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவியும் விலகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரச குடும்பம் உலகிலேயே மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னமும் அவர்களுக்கான தனித்துவம் மாறவில்லை.  இருப்பினும் கருத்துவேறுபாடு காரணமாக  அரசகுடும்பத்திலிருந்து வெளியேற போவதாகவும்,  பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் என்றும்   இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த வாரம் தெரிவித்தனர்.  இந்த விவகாரம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹாரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை என்றும் அவர்கள் இனிவரும் காலங்களில்   Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரண்மனையின் சட்டதிட்டங்கள்  அமெரிக்க நடிகையான  மேகனுக்கு  ஒத்துவரவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட உரசல்கள் பெரிய விரிசலை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறப்படுகிறது.