×

அய்யா பாலத்தைக் காணோம், எப்படியாச்சும் கண்டுபிடிச்சு குடுங்க – ரஷ்ய காமெடி

கமல் உலகநாயகன் என்பதை ஏற்பீர்களோ இல்லையோ, நம்ம வடிவேலு கண்டிப்பாக உலக நாயகன்தான். கற்பனை காட்சி என ரசிக்கப்பட்ட அவருடைய பல காமெடிகள் நிஜத்தில் நடந்துவருவதைக் கண்டால், உலக நாயகன பார்ட் 2 பட்டத்தை வடிவேலுக்கு தருவதில் யாருக்கும் பிரச்னை இருக்காது. வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி மாதிரி ரஷ்யாவில் ஒரு அலங்கோலம் நிகழந்திருக்கிறது. கமல் உலகநாயகன் என்பதை ஏற்பீர்களோ இல்லையோ, நம்ம வடிவேலு கண்டிப்பாக உலக நாயகன்தான். கற்பனை காட்சி என ரசிக்கப்பட்ட அவருடைய பல
 

கமல் உலகநாயகன் என்பதை ஏற்பீர்களோ இல்லையோ, நம்ம வடிவேலு கண்டிப்பாக உலக நாயகன்தான். கற்பனை காட்சி என ரசிக்கப்பட்ட அவருடைய பல காமெடிகள் நிஜத்தில் நடந்துவருவதைக் கண்டால், உலக நாயகன பார்ட் 2 பட்டத்தை வடிவேலுக்கு தருவதில் யாருக்கும் பிரச்னை இருக்காது. வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி மாதிரி ரஷ்யாவில் ஒரு அலங்கோலம் நிகழந்திருக்கிறது.

கமல் உலகநாயகன் என்பதை ஏற்பீர்களோ இல்லையோ, நம்ம வடிவேலு கண்டிப்பாக உலக நாயகன்தான். கற்பனை காட்சி என ரசிக்கப்பட்ட அவருடைய பல காமெடிகள் நிஜத்தில் நடந்துவருவதைக் கண்டால், உலக நாயகன பார்ட் 2 பட்டத்தை வடிவேலுக்கு தருவதில் யாருக்கும் பிரச்னை இருக்காது. வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி மாதிரி ரஷ்யாவில் ஒரு அலங்கோலம் நிகழந்திருக்கிறது. ரஷ்யாவில் 56 டன் எடை 75 அடி நீளம் உள்ள ரெயில்வே பாலம் காணாமல் போய்விட்டது. முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதியின் மேல் அமைந்துள்ள இந்த ரெயில்வே பாலம் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இங்கு மக்கள் நடமாட்டம் பெரிய அளவில் இருக்காது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் இந்த பாலம் மாயமாக மறைந்ததாக அந்நாட்டின் சமூக வலைத்தளம் ஒன்றில் தகவல் பரவியது. பாலம் கீழே விழுந்து உடைந்திருந்தால் அதன் இடிபாடுகள் இருக்க வேண்டும், ஆனால் சுத்தமாக பாலமே காணோம் என்பதுதான் தற்போது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உலோகத் திருடர்களால் இந்தப் பாலம் திருடப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வாசிகள் கூறி வருகின்றனர். இதற்கிடையில், ரெயில்வே பாலம் காணாமல் போனது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உலோக பாகங்களை விற்பதற்காக மர்ம கும்பல் பாலத்தை உடைத்து திருடியிருக்கலாம் என கூறப்பட்டாலும், இவ்வளவு பெரிய பாலத்தை அந்த கும்பல் எப்படி திருடி கொண்டு சென்றிருக்க முடியும் என்பது புரியாத புதிராகவே இருப்பதால் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். கண்டிப்பா அந்த ஊர் எஸ்.ஐ. யூனிஃபார்மை கழற்றி வீசிட்டு லங்கோடுடன் செல்லப்போகிறார் என்பது மட்டும் நிச்சயம்!