×

அமேசான் நிறுவனர் விவாகரத்து: நினைத்து கூட பார்க்க முடியாத தொகையை செட்டில்மெண்டாக கொடுத்த வினோதம்!

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெக்கின்ஸி என்பவரை 1993 ஆம் ஆண்டு
 

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெக்கின்ஸி என்பவரை 1993 ஆம் ஆண்டு  காதலித்து கரம் பிடித்தார். இவர்கள் திருமணத்திற்குப் பிறகு தான்  அமேசான் நிறுவனம் துவங்கப்பட்டது. அமேசான் நிறுவனத்தின் அசுரர் வளர்ச்சிக்கு மெக்கின்ஸியின் உழைப்பும் உண்டு. ஆனால் அவர் அமேசானில் பங்குதாரராக இல்லை. இதையடுத்து சமீபகாலமாகக் கணவன் மனைவி இருவரும்பிரிந்து வாழ்ந்து வரும்  நிலையில், விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர். 

ஜெஃப் பெசோஸ் – மெக்கின்ஸி இருவரின் திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வரும் நிலையில் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டிய பொறுப்பு ஜெஃப் பெசோஸ் இருக்கிறது. அந்த வகையில் ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் வைத்துள்ள  16 சதவீத பங்குகள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடியில் பாதியை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில்  அமேசான் நிறுவனத்தில் கணவர் ஜெப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 4 சதவீத பங்குகளை மட்டும் பெற்றுக்கொள்ள  மெக்கின்ஸி  ஒப்புக் கொண்டார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும். இது மட்டுமின்றி ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள்  உட்பட மற்ற நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளையும் கணவர் பெசோஸூக்கு மெக்கின்ஸி விட்டுக் கொடுத்துள்ளார். 

 

இதையடுத்து இருவரும் நேற்று விவகாரத்துச் சொத்து உடன்பாட்டில் நேற்று கையெழுத்திட்டனர். வரலாற்றில் முதன்முறையாக விவாகரத்து பெறும் மனைவிக்கு இவ்வளவு பெரும் தொகையை ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது .

இதையும் வாசிக்க: தமிழிசை பேரச் சொன்னாலே சுகமா இருக்கும்: நடிகர் கார்த்திக் பகீர் ஸ்டேட்மெண்ட்