×

அமேசான் நிறுவனரின் ஆடம்பர வீடு… அசரடிக்கும் வசதிகள்…

ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் இருப்பது அமேசான் மட்டுமே! அவய்ங்களும் அப்பப்ப ஏதாவது ஆஃபர் போடுறதும்… நம்ம ஆளுங்களும் முதல் ஆளா போய் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான சம்பவம்தான் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் இருப்பது அமேசான் மட்டுமே! அவய்ங்களும் அப்பப்ப ஏதாவது ஆஃபர் போடுறதும்… நம்ம ஆளுங்களும் முதல் ஆளா போய் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான சம்பவம்தான். இப்படி உலகம் முழுக்க வாரி வழங்கியதில் அமேசான் நிறுவனதின் நிறுவனர் ‘ஜெப் பெசாஸ்’ அமெரிக்காவில் வாங்கியிருக்கும் வீடுகள் பற்றித்தான் உலகம்
 

ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் இருப்பது அமேசான் மட்டுமே! அவய்ங்களும் அப்பப்ப ஏதாவது ஆஃபர் போடுறதும்… நம்ம ஆளுங்களும் முதல் ஆளா போய் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான சம்பவம்தான்

ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் இருப்பது அமேசான் மட்டுமே! அவய்ங்களும் அப்பப்ப ஏதாவது ஆஃபர் போடுறதும்… நம்ம ஆளுங்களும் முதல் ஆளா போய் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான சம்பவம்தான்.

இப்படி உலகம் முழுக்க வாரி வழங்கியதில் அமேசான் நிறுவனதின் நிறுவனர் ‘ஜெப் பெசாஸ்’ அமெரிக்காவில் வாங்கியிருக்கும் வீடுகள் பற்றித்தான் உலகம் முழுக்க பேச்சு!
ஆள் ஏற்கனவே உலகப் பெரும் பணக்காரர்களின் லிஸ்டில் இருக்கிறவர்தான்.இதுபோல் ஏற்கனவே பல வீடுகள் இருந்தாலும், இந்த முறை வீங்கிய வீட்டின் ஸ்பெஷல் வேற லெவல்! நியூயார்க் நகரில் இவர் வாங்கியிருக்கும் மூன்று வீடுகளில் இரண்டு அபார்ட்மெண்ட் டைப். மற்றொன்று மூன்று மாடிகள் கொண்ட சொகுசு வீடு.இவை மூன்றும் ஒரே தெருவில் அடுத்தடுத்து இருக்கிற மாதிரி வாங்கியிருக்கிறார்.

இதன் விலை எவ்வளவு தெரியுமா..? நம்ம ஊர் பணத்துக்கு 554 கோடி ரூபாய். இவ்வளவு விலை கொடுத்து வாங்கிற அளவுக்கு அதில் என்ன பெஷல் இருக்குங்குகிற கேள்வியும் உங்களுக்கு வந்திருக்கும் என்பதில் மாற்றம் இல்லை. விசாலமான சொகுசு வீட்டில் பரந்து விரிந்த படுக்கை அறைகளுடன் ‘எம்பையர் ஸ்டேட்’ கட்டடத்தை குளியல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டே பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சொகுசு வீட்டின் 3வது தளத்திலிருந்து தெற்கு,கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை ரசிக்கும் வகையில், கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியை படித்து முடித்த கையோடு அமேசான்ல ஏதாவது ஆஃபர் போட்டுருக்கானான்னு பாருங்க…தலைவன் அடுத்த வீடு வாங்க வேண்டாமா!?