×

அமேசானில் அபூர்வங்கள் அழிந்ததற்கு டைட்டானிக் நாயகனே காரணம் !  பிரேசில் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு !

தொண்டு நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து அமேசான் காடுகளுக்கு தீ வைக்கச் சொன்னதாக டைட்டானிக் கதாநாயகன் மீது பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ குற்றச்சாட்டிற்கு டைட்டானிக் நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ மறுப்பு தெரிவித்துள்ளார். தொண்டு நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து அமேசான் காடுகளுக்கு தீ வைக்கச் சொன்னதாக டைட்டானிக் கதாநாயகன் மீது பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ குற்றச்சாட்டிற்கு டைட்டானிக் நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ மறுப்பு தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் அமேசான்
 

தொண்டு நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து அமேசான் காடுகளுக்கு தீ வைக்கச் சொன்னதாக டைட்டானிக் கதாநாயகன் மீது பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். 
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ குற்றச்சாட்டிற்கு டைட்டானிக் நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொண்டு நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து அமேசான் காடுகளுக்கு தீ வைக்கச் சொன்னதாக டைட்டானிக் கதாநாயகன் மீது பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். 
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ குற்றச்சாட்டிற்கு டைட்டானிக் நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் கருகி அழிந்தன. இது உலக அளவில் இந்த பிரச்சனை பேசப்பட்டது. இந்த தீ விபத்திற்குக்கு பிரேசில் அதிபரின் கார்ப்பரேட் கொள்கைதான் காரணம் என அங்குள்ள பழங்குடிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே இந்த தீ விபத்திற்கு ’டைட்டானிக்’திரைப்பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ காரணம் என பிரேசில் அதிபர் புதியதாக ஒரு விஷயத்தை சொல்லி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த வியாழனன்று பேசிய பிரேசில் அதிபர், தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் அமேசான் காடுகளை எரிக்கச் சொல்லி அவர், லியானார்டோ டிகாப்ரியோ தான்  நிதி அளித்துள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 
இதற்கு மறுப்பு தெரிவித்து லியானார்டோ டிகாப்ரியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இயற்கை வளம் மற்றும் கலாசாரத்தையும் பாதுகாக்கப் போராடும் பிரேசில் மக்களை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள டிகாப்ரியோ, அவற்றைப் பாதுகாக்க போராடும் மக்களோடு நிற்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அமேசான் காடுகளைக் குறிவைப்பவர்களுக்கு பண உதவி செய்வதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமேசான் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மக்கள், விஞ்ஞானிகளுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்திற்கு உண்மையான காரணத்தை கண்டறியாமல் மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதிலேயே அதிபர் குறியாக உள்ளதாக பிரேசில் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.