×

அமெரிக்காவில் சிறுமியுடன் உடலுறவு – இந்திய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

அமெரிக்காவில் 23 வயது இந்திய இளைஞர் சிறுமியுடன் உடலுறவு கொண்டதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். நியூயார்க்: அமெரிக்காவில் 23 வயது இந்திய இளைஞர் சிறுமியுடன் உடலுறவு கொண்டதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மாணவர் விசா மூலம் அமெரிக்காவுக்கு படிக்க சென்ற சச்சின் அஜி பாஸ்கர் என்ற இந்திய இளைஞர் 11 வயது சிறுமியுடன் உடலுறவு தொடர்பாக மெசேஜ் மற்றும் இ-மெயில் மூலம் பேசி வந்துள்ளார். இந்த பழக்கத்தை தொடர்ந்து அந்த சிறுமியுடன்
 

அமெரிக்காவில் 23 வயது இந்திய இளைஞர் சிறுமியுடன் உடலுறவு கொண்டதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்: அமெரிக்காவில் 23 வயது இந்திய இளைஞர் சிறுமியுடன் உடலுறவு கொண்டதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

மாணவர் விசா மூலம் அமெரிக்காவுக்கு படிக்க சென்ற சச்சின் அஜி பாஸ்கர் என்ற இந்திய இளைஞர் 11 வயது சிறுமியுடன் உடலுறவு தொடர்பாக மெசேஜ் மற்றும் இ-மெயில் மூலம் பேசி வந்துள்ளார். இந்த பழக்கத்தை தொடர்ந்து அந்த சிறுமியுடன் கடந்த ஆகஸ்ட், 2018-ஆம் ஆண்டு இந்திய இளைஞர் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதியப்பட்டது.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. இதில் இந்திய இளைஞரின் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதனால் இந்திய இளைஞருக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லாத அதிகபட்சமாக வாழ்நாள் ஆயுள் தண்டனையும் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.