×

அமெரிக்க பணக்கார பெண்களின் பட்டியலில் 3 இந்திய பூர்விக‌ பெண்கள்!

இந்த பட்டியலில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று பெண்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவன தலைவர்(தலைவி) ஜெய்ஸ்ரீ உள்ளல், சிண்டெல் நிறுவனத்தின் நீர்ஜா சேத்தி, கன்ஃப்ளூன்ட் நிறுவனத்தின் நேஹா நர்கடே ஆகிய மூவருமே இச்சிறப்புக்கு உரியவர்கள். பணக்கார குடும்ப பிண்ணனி இல்லாமல், சுயமாக சம்பாதித்து உயர்ந்த அமெரிக்காவின் 80 பணக்கார பெண்கள் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்ரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று பெண்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவன
 

இந்த பட்டியலில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று பெண்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவன தலைவர்(தலைவி) ஜெய்ஸ்ரீ உள்ளல், சிண்டெல் நிறுவனத்தின் நீர்ஜா சேத்தி, கன்ஃப்ளூன்ட் நிறுவனத்தின் நேஹா நர்கடே ஆகிய மூவருமே இச்சிறப்புக்கு உரியவர்கள்.

பணக்கார குடும்ப பிண்ணனி இல்லாமல், சுயமாக சம்பாதித்து உயர்ந்த அமெரிக்காவின் 80 பணக்கார பெண்கள் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்ரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று பெண்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவன தலைவர்(தலைவி) ஜெய்ஸ்ரீ உள்ளல், சிண்டெல் நிறுவனத்தின் நீர்ஜா சேத்தி, கன்ஃப்ளூன்ட் நிறுவனத்தின் நேஹா நர்கடே ஆகிய மூவருமே இச்சிறப்புக்கு உரியவர்கள்.

ஜெய்ஸ்ரீ உள்ளல் இந்த பட்டியலில் 18வது இடத்தைப் பிடித்துள்ளார். சொத்து மதிப்பாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்ட 58 வயது உள்ளல், லண்டலின் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, அமெரிக்காவில் சாதித்தவர்.

பட்டியலில் 23ஆவது இடத்தைப் பிடித்துள்ள நீர்ஜா சேத்தி அவருடைய கணவருடன் சேர்ந்து 1980ல் வெறும் 2000 டாலர்களுடன் துவங்கிய சிண்டெல் நிறுவனம், 2018ல் 3.4 பில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. சேத்தியின் பங்காகக் கிடைத்த‌து அரை பில்லியன் டாலர்களுக்கும் மேல். சுயமாக உழைத்து முன்னேறிய அமெரிக்க பெண்களின் பட்டியலில் 60ஆவது இடத்தைப் பிடித்துள்ள நேஹாவின் தற்போதைய சொத்து மதிப்பு 360 மில்லியன் டாலர்கள்.