×

அன்பு பிஃப்டி சிக்ஸ்டி மட்டுமல்ல 103 ஆன போதும் மலரும்!

மணமகன் ஜானுக்கு 100 வயது, மணமகள் ஃபிலிஸுக்கு 103 வயது. அதானலென்ன, சச்சினைவிட அவர் மனைவி மூத்தவர்தான். காதலுக்கு வயது ஒரு தடையா என்ன? இருவரும் ஒரு முதியோர் இல்லத்தில் கடந்தாண்டு முதன்முதலாக சந்தித்திருக்கிறார்கள். கண்டதும் காதல் தீ பற்றிக்கொள்கிறது! வழக்கமா ஒரு திருமண பத்ரிகையோட டெம்ப்ளேட் எப்படி இருக்கும்? இன்னாரின் மகன் வழிப்பேரனும், இன்னாரின் மகள் வழிப்பேரனும், இன்னாரின் மகனுமான திருவளர்ச்செல்வனுக்கும், இன்னாரின் மகளுமான திருவளர்ச்செல்விக்கும் திருமணம் என்பதாகத்தானே இருக்கும். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் நடந்த
 

மணமகன் ஜானுக்கு 100 வயது, மணமகள் ஃபிலிஸுக்கு 103 வயது. அதானலென்ன, சச்சினைவிட அவர் மனைவி மூத்தவர்தான். காதலுக்கு வயது ஒரு தடையா என்ன? இருவரும் ஒரு முதியோர் இல்லத்தில் கடந்தாண்டு முதன்முதலாக சந்தித்திருக்கிறார்கள். கண்டதும் காதல் தீ பற்றிக்கொள்கிறது!

வழக்கமா ஒரு திருமண பத்ரிகையோட டெம்ப்ளேட் எப்படி இருக்கும்? இன்னாரின் மகன் வழிப்பேரனும், இன்னாரின் மகள் வழிப்பேரனும், இன்னாரின் மகனுமான திருவளர்ச்செல்வனுக்கும், இன்னாரின் மகளுமான திருவளர்ச்செல்விக்கும் திருமணம் என்பதாகத்தானே இருக்கும். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் நடந்த ஒரு திருமணத்தில் ஒரு வித்தியாசமான அழைப்பிதழ். இன்ன இன்னாரின் கொள்ளுத்தாத்தாவும், இன்ன இன்னாரின் தாத்தாவும், இன்ன இன்னாரின் தந்தையுமான திருவளர்ச்செல்வன் ஜான் குக்குக்கும், இன்ன இன்னாரின் கொள்ளுப்பாட்டியும், இன்ன இன்னாரின் பாட்டியும், இன்ன இன்னாரின் தாயுமான திருவளர்ச்செல்வி ஃபிலிஸ் குக்குக்கும் கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்திகள், பேரன்கள் பேத்திகள், மகன்கள் மகள்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்திகள், பேரன் பேத்திகள், பிள்ளைகள் மற்றும் நட்புகள் புடைசூழ வந்து மணமக்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்ன தலை சுத்துதா? உண்மையான செய்தி. மணமகன் ஜானுக்கு 100 வயது, மணமகள் ஃபிலிஸுக்கு 103 வயது. அதானலென்ன, சச்சினைவிட அவர் மனைவி மூத்தவர்தான். காதலுக்கு வயது ஒரு தடையா என்ன? இருவரும் ஒரு முதியோர் இல்லத்தில் கடந்தாண்டு முதன்முதலாக சந்தித்திருக்கிறார்கள். கண்டதும் காதல் தீ பற்றிக்கொள்ள, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஒருவருட காலம் டேட்டிங்கிற்குப் பிறகு இப்போது திருமணம் செய்திருக்கிறார்கள். நூறு வயசைத் தாண்டியும்கூடவா திருமணம் செய்வார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு! அடுத்த ஆண்டுக்குள் நல்ல செய்தி ஏதேனும் சொல்லமாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு! மணமக்கள். நூறாண்டு வாழ்க என இவ்விளம் ஜோடியை வாழ்த்த முடியாது, லாஜிக் மிஸ்டேக். இருநூறாண்டு வாழ்க என வாழ்த்த வயதில்லை, வணங்குவோம்!