×

அடேயப்பா… படிகட்டில் உட்கார்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்!

‘ரோம் நகருக்குச் சென்றால் ரோமானியனாக இரு’ என்ற பழமொழியை ஒரு முறைக்கு பல முறை மனப்பாடம் செய்துக் கொண்டு தான் இனி ரோம் நகருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் போல. உலகின் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட நகரங்களில் ரோம் நகரத்திற்கு எப்போதுமே தனிச்சிறப்பு உண்டு. அந்த நகரத்தின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களும், சிறப்பான கட்டிடக்கலையும், சீதோஷ்ண நிலையும் உலகம் முழுவதும் இருந்து வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ‘ரோம் நகருக்குச் சென்றால் ரோமானியனாக இரு’
 
‘ரோம் நகருக்குச் சென்றால் ரோமானியனாக இரு’ என்ற பழமொழியை ஒரு முறைக்கு பல முறை மனப்பாடம் செய்துக் கொண்டு தான் இனி ரோம் நகருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் போல. உலகின் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட நகரங்களில் ரோம் நகரத்திற்கு எப்போதுமே தனிச்சிறப்பு உண்டு. அந்த நகரத்தின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களும், சிறப்பான கட்டிடக்கலையும், சீதோஷ்ண நிலையும் உலகம் முழுவதும் இருந்து வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

இதையடுத்து, ரோம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், ரோம் நகரில் அமைந்துள்ள புராதன வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டு அரசு புராதன சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் பார்வையிட வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1725-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ அல்லது அந்த பகுதிகளில் உணவு உள்ளிட்ட வேறு வகையான குப்பைகளை கொட்டினாலோ உடனடியாக 400 யூரோ அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 400 யூரோக்களின் இந்திய மதிப்பு ரூ.31 ஆயிரம் ஆகும். இந்த ஸ்பானிஷ் படிகள் மொத்தம் 174 படிகளை கொண்டுள்ளது. இந்த படிகளில் யாரும் அமரக் கூடாது என அங்குள்ள காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசின் இந்த கட்டுப்பாட்டுக்கு ஒரு பக்கம்

அதிகளவில்  வரவேற்பு இருந்தாலும், சுற்றுலா வரும் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதனால் ரோம் நகருக்குச் சென்றால், ஹார்ட்டின் வரைந்து அம்புக்குறி எல்லாம் தப்பித் தவறி போட்டு வைக்காதீங்க… அதையும் மீறி உங்கள் காதல் புனிதமானது என்று காதல் நகரின் படிக்கட்டில் உங்கள் காதல் கல்வெட்டைப் பதிக்க நினைத்தால், கையோடு கூடுதலாக ரூ.31 ஆயிரம் எடுத்துச் செல்லுங்கள்!