×

யூ-டியூப் அதிரடி: டிரம்பின் வீடியோ நீக்கம்; சானலுக்கு தடை!

பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களைத் தொடர்ந்து யூ-டியூப் நிறுவனமும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வீடியோவை நீக்கி, அவரது சானலுக்கு தற்காலிக தடை விதித்திருக்கிறது. கேபிட்டலில் அரங்கேறிய கலவரத்திற்குப் பின்னும் கூட தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாமல் அதிபர் டிரம்ப் அடம்பிடிக்கிறார். பைடனுக்கு எதிரான தனது கருத்தை எந்த வழியிலாவது சொல்லிவிட வேண்டும் என்று அவர் கங்கணம் கட்டி சுற்றிவருகிறார். ஏற்கனவே, அவரின் பதிவுகள் கலவரத்தைத் தூண்டுவதாகக் கூறி அவரது கணக்கை பேஸ்புக் காலவரையில்லாமல் முடக்கியிருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாகவே முடக்கியுள்ளது.
 

பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களைத் தொடர்ந்து யூ-டியூப் நிறுவனமும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வீடியோவை நீக்கி, அவரது சானலுக்கு தற்காலிக தடை விதித்திருக்கிறது.

கேபிட்டலில் அரங்கேறிய கலவரத்திற்குப் பின்னும் கூட தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாமல் அதிபர் டிரம்ப் அடம்பிடிக்கிறார். பைடனுக்கு எதிரான தனது கருத்தை எந்த வழியிலாவது சொல்லிவிட வேண்டும் என்று அவர் கங்கணம் கட்டி சுற்றிவருகிறார்.

ஏற்கனவே, அவரின் பதிவுகள் கலவரத்தைத் தூண்டுவதாகக் கூறி அவரது கணக்கை பேஸ்புக் காலவரையில்லாமல் முடக்கியிருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாகவே முடக்கியுள்ளது. இதையடுத்து சமீபத்தில் டிரம்ப் தன்னுடைய யூ-டியூப் சானலில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோ தங்களது கொள்கைகள், விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி யூ-டியூப் நிறுவனமும் டிரம்பின் சானலை தற்காலிகமாக தடை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வீடியோவையும் நீக்கியுள்ளது. இந்தத் தடையானது இன்னும் ஒரு வார காலம் நீடிக்கலாம் என நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

டிரம்பின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருந்தாலும், அவரின் செயல்பாடுகளால் விரைவிலேயே அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான வேலைகள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரின் நடவடிக்கைகள் சொந்தக் கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.