×

ஜப்பான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் யோஷிஹைட் சுகா

ஜப்பான் நாட்டின் பிரதமராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் பிரதமரின் நண்பர் யோஷிஹைட் சுகா. ஜப்பான் நாட்டில் நீண்டகாலம் பிரதமர் பதவியில் வகித்தவர் எனும் பெருமைக்கு உரியர் ஷின்சோ அபே. லிபரல் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஷின்சே அபே, சென்ற மாத இறுதியில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு வயது 65. ஷின்சே அபேவின் ராஜினாமாவுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவருக்கு இருந்த உடல்நலக் குறைபாடு என்று ஜப்பான் நாட்டுச் செய்திகள் தெரிவித்தன. ஷின்சே அபேவும்
 

ஜப்பான் நாட்டின் பிரதமராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் பிரதமரின் நண்பர் யோஷிஹைட் சுகா.

ஜப்பான் நாட்டில் நீண்டகாலம் பிரதமர் பதவியில் வகித்தவர் எனும் பெருமைக்கு உரியர் ஷின்சோ அபே. லிபரல் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஷின்சே அபே, சென்ற மாத இறுதியில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு வயது 65.

shinzo abe

ஷின்சே அபேவின் ராஜினாமாவுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவருக்கு இருந்த உடல்நலக் குறைபாடு என்று ஜப்பான் நாட்டுச் செய்திகள் தெரிவித்தன. ஷின்சே அபேவும் அப்போது மருத்துவமனைக்குச் சென்று திரும்பும் செய்திகள் வெளியாகின.

லிபரல் ஜனநாயக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன் நடந்தது. அந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 71 வயது யோஷிஹைட் சுகா வெற்றி பெற்று லிபரல் ஜனநாயக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனால், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் யோஷிஹைட் சுகா பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் யோஷிஹைட் சுகா விரைவில் பிரதமர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. ஆயினும் ஜப்பானில் கொரோனா பரவல் உள்ளிட்ட பல சிக்கல்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்படி அவற்றைச் சமாளிக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.