×

WWE-யிலிருந்து ‘அண்டர்டேக்கர்’ ஓய்வு பெற்றார் – ரசிகர்கள் கண்ணீருடன் விடைகொடுத்தனர்

ஸ்டாம்போர்டு: WWE என்று அழைக்கப்படும் பிரபல மல்யுத்த போட்டியில் இருந்து அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றார். WWE என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டி உலகம் முழுக்க மிகவும் பிரபலம் ஆகும். அதில் பங்கேற்கும் பல வீரர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர். அந்தப் போட்டியில் பிரபலமாகும் வீரர்கள் சிலர் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகின்றனர். ஜான் சேனா, தி ராக், படிஸ்டா உள்ளிட்டோர் அவர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு நிகரான மற்றொரு முக்கியமான WWE வீரர் அண்டர்டேக்கர் ஆவார். கடந்த
 

ஸ்டாம்போர்டு: WWE என்று அழைக்கப்படும் பிரபல மல்யுத்த போட்டியில் இருந்து அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றார்.

WWE என்று அழைக்கப்படும் மல்யுத்த போட்டி உலகம் முழுக்க மிகவும் பிரபலம் ஆகும். அதில் பங்கேற்கும் பல வீரர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர். அந்தப் போட்டியில் பிரபலமாகும் வீரர்கள் சிலர் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகின்றனர். ஜான் சேனா, தி ராக், படிஸ்டா உள்ளிட்டோர் அவர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு நிகரான மற்றொரு முக்கியமான WWE வீரர் அண்டர்டேக்கர் ஆவார்.

கடந்த 1990 முதல் இப்போதைய 2020 வரை என்று மூன்று தசாப்தங்களாக WWE போட்டிகளில் அண்டர்டேக்கர் பங்கேற்று வந்தார். இறந்த பின்னும் உயிருடன் வந்ததாக இவரை WWE போட்டிகளில் காட்டியதால் டெட்மேன் என்று இவரை குறிப்பிடுவார்கள். இவர் மேடைக்கு வருவதற்கு முன் கும்மிருட்டு பரவ விடுவதுடன், மரண ஓசை போன்ற மணியோசை ஒன்றை எழுப்புவார்கள். இதன் மூலம் அண்டர்டேக்கர் வருகையை உணர்ந்து ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைவான WWE போட்டிகளிலேயே அண்டர்டேக்கர் பங்கேற்றார். 55 வயதாகும் இவர் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அண்டர்டேக்கருக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.