×

சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா தொற்றால் மருத்துவர் மரணம்

வுகான்: சீனாவின் வுகான் நகரத்தில் விசில்ப்ளோவர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் மருத்துவர் மரணம் அடைந்தார். சீனாவின் வுகான் நகரத்தில் விசில்ப்ளோவர் மருத்துவமனை உள்ளது. அங்கு ஹூ வேய்ஃபெங் என்ற மருத்துவர் கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் தற்போது மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்து சீனாவின்
 

வுகான்: சீனாவின் வுகான் நகரத்தில் விசில்ப்ளோவர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் மருத்துவர் மரணம் அடைந்தார்.

சீனாவின் வுகான் நகரத்தில் விசில்ப்ளோவர் மருத்துவமனை உள்ளது. அங்கு ஹூ வேய்ஃபெங் என்ற மருத்துவர் கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் தற்போது மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து சீனாவின் வுகான் மத்திய மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆறாவது மருத்துவர் ஹூ வேய்ஃபெங் ஆவார். ஹு வேய்ஃபெங் மரணம் தொடர்பான அறிக்கையை வுஹான் மத்திய மருத்துவமனை இன்னும் வெளியிடவில்லை. கல்லீரல் பாதிப்பு காரணமாக அவரது தோல் கறுப்பு நிறமாகி விட்டதாக சீன ஊடகங்கள் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தின் பாதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன் பிறகு வியத்தகு முறையில் அங்கு கொரோனா பரவல் குறைந்து விட்டது. 140 கோடி பேருக்கு மேல் வசிக்கும் சீனாவில் கொரோனாவால்  இறந்தவர்கள் எண்ணிக்கை 4,634-ஆக உள்ளது.