×

மூன்றாம் உலகப்போர் வரலாம் – இங்கிலாந்து தளபதி பர,பர எச்சரிக்கை

By subas Chandra boseசமீப காலமாக உலகின் பல நாடுகள் ஒருவருக்கொருவர் முறைத்தபடியும், சண்டையிட்டபடியும் உள்ளனர். உதாரணமாக இந்தியா-சீனா, ரஷியா-உக்ரைன், அர்மீனியா-அசர்பைஜான் இடையேயான மோதல்களைச் சொல்லலாம். இந்திய எல்லையில் சீனாவும்,இந்தியாவும் தங்களது நாட்டுப் படைகளை நிலை நிறுத்தியுள்ளது இது போல் சிரியாவில் ரஷியா, ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘ஸ்கை நியூஸ்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அங்குள்ள முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ‘நிக் கார்டர்’ சிறப்பு பேட்டி
 

By subas Chandra bose
சமீப காலமாக உலகின் பல நாடுகள் ஒருவருக்கொருவர் முறைத்தபடியும், சண்டையிட்டபடியும் உள்ளனர். உதாரணமாக இந்தியா-சீனா, ரஷியா-உக்ரைன், அர்மீனியா-அசர்பைஜான் இடையேயான மோதல்களைச் சொல்லலாம். இந்திய எல்லையில் சீனாவும்,இந்தியாவும் தங்களது நாட்டுப் படைகளை நிலை நிறுத்தியுள்ளது இது போல் சிரியாவில் ரஷியா, ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘ஸ்கை நியூஸ்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அங்குள்ள முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ‘நிக் கார்டர்’ சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்ர். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: தற்போது உலகின் பல பிராந்தியங்களில் நடந்து வரும் மோதல்கள் விரைவில் முழுமையான போராக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு தவறான முடிவுகள்தான் காணமாக இருக்க முடியும். இதுதான் தற்போது நிலவும் உண்மையான ஆபத்து.


சண்டையில் செய்பவர்கள் தங்களது இந்தச் செயல்களால் போர் ஏற்படலாம் என்ற உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர். இது நாடுகளுக்கு இடையே முழுமையான போருக்கு நம்மை கொண்டு சென்றுவிடும். கடந்த நூற்றாண்டை நாம் திரும்பி பார்க்கும் போது இரண்டு உலகப்போர்களுக்கு முன்னதாகவும் மோதல்கள் தவறான முடிவுகள் காரணமாக உலகப்போருக்கு நம்மை கொண்டு சென்று விட்டது. அது போன்ற ஒன்றை நாம் மீண்டும் பார்க்கக்கூடாது வரலாற்று நிகழ்வு மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது
3-ம் உலகப் போருக்கான ஆபத்துக்கள் அதிகம் உள்ளது என்றே கருதுகிறேன். வரப்போகும் அந்த அபாயங்கள் குறித்து நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் இந்த மோதல்கள் உலக போருக்கு வழிவகுக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்..