×

‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ தோன்றிய வரலாறு மற்றும் காரணம் (World No Tobacco Day 2020)

உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி கடைபிடிக்கப்படும் நிகழ்வாகும். புகையிலை விளைவிக்கும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் புகையிலைக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரம் மூலம் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்யப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதன் மூலமாக 80 லட்சம் பேர் இறக்கின்றனர். நுரையீரல் புற்றுநோய், காசநோய் போன்ற
 

உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி கடைபிடிக்கப்படும் நிகழ்வாகும். புகையிலை விளைவிக்கும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் புகையிலைக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரம் மூலம் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்யப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதன் மூலமாக 80 லட்சம் பேர் இறக்கின்றனர். நுரையீரல் புற்றுநோய், காசநோய் போன்ற சுவாசக் கோளாறு தொடர்பான நோய்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தரவுகளின்படி, நாட்டில் உள்ள புற்றுநோய் நோயாளிகளில் சுமார் 30 சதவீதம் பேருக்கு புகையிலை பயன்படுத்தியதால் புற்றுநோய் வந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு 1987-ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது ஏப்ரல் 7, 1988 அன்று ‘உலக புகை பிடிக்காத நாள்’ என்று அறிவித்தது. மக்கள் குறைந்தபட்சம் 24 மணிநேரம் புகை பிடிக்காமல் இருப்பதற்கு இந்த நாள் உருவாக்கப்பட்டது. புகையிலை பயன்பாட்டை விட்டு வெளியேற சிரமப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்பு அதே ஆண்டில் உலக சுகாதார அமைப்பு மே 31-ஆம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு நாள்’ என்று கடைபிடிக்க முடிவு செய்தது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புகையிலை பயன்படுத்துவதில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். 1975 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிகரெட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிகரெட் பாக்கெட்கள் மற்றும் விளம்பரங்களில் புகைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும். பொதுப் போக்குவரத்து வாகனத்தில் புகைபிடித்தல் சட்டவிரோதமானது என்று 1988-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.