×

மாரடைப்பால் இறந்த பெண்ணை தூக்கிலிட்ட கொடூரம்!

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சாரா இஸ்மாயில். இவரையும் இவரது குழந்தையும் கணவர் நீண்ட நாள்களாகத் துன்புறுத்தி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இஸ்மாயில் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இறுதியில், இஸ்மாயிலின் கணவர் வன்முறையின் உச்சத்திற்கே சென்றதால் தற்காப்புக்காக அவரைக் கொலைசெய்திருக்கிறார். நம் நாட்டில் மட்டுமே தற்காப்புக்காகக் கொலை செய்தால் விடுதலை கிடைக்கும். ஈரானைப் பொறுத்தவரையில் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் . இஸ்மாயிலின் கொலை தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம்
 

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சாரா இஸ்மாயில். இவரையும் இவரது குழந்தையும் கணவர் நீண்ட நாள்களாகத் துன்புறுத்தி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இஸ்மாயில் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இறுதியில், இஸ்மாயிலின் கணவர் வன்முறையின் உச்சத்திற்கே சென்றதால் தற்காப்புக்காக அவரைக் கொலைசெய்திருக்கிறார்.

நம் நாட்டில் மட்டுமே தற்காப்புக்காகக் கொலை செய்தால் விடுதலை கிடைக்கும். ஈரானைப் பொறுத்தவரையில் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் . இஸ்மாயிலின் கொலை தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சூழலில் நேற்று தூக்கிலிடப்படும் நாள் தொடங்கியுள்ளது. மொத்தம் 16 நபர்கள் நேற்று தூக்கிலிடப்படும் மேடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நபரும் எப்படி தூக்கிலிடப்படுகிறார்கள் என்பதை வீடியோ மூலம் சாரா இஸ்மாயிலிடம் காட்டியிருக்கிறார்கள்.

அதனைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார். அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அவர் தான் இறந்துவிட்டாரே அப்புறம் ஏன் தூக்கிலிட வேண்டும் என்று சிந்திக்காத அதிகாரிகள் இறந்த பின்பும் அவரைக் கயிற்றில் தொங்கவிட்டு தூக்கிலிட்டுள்ளனர். ஈரானில் கொலை செய்தவரை கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் முன்னிலையில் தூக்கிலிடுவார்கள். அப்போது தான் கொலை செய்யப்பட்டவருக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அங்குள்ளது. அதன்படி இஸ்மாயில் அமர்ந்திருந்த நாற்காலியை அவர் கணவரின் தாய் எத்திவிட்டு தூக்கிலிடும் செயல் அரங்கேறியிருக்கிறது. இக்கொடூரமான செயல் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.