×

புத்தர் ஓவியம் உள்ள புடவையைக் கட்டியதால் இலங்கையில் ஒரு பெண் கைது!

இலங்கையில் பெரும்பான்மையோர் பின்பற்றும் மதம் புத்தம். 2012 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையில் 70 சதவிகித பேர் புத்த மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள். இது தவிர, சைவம், இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்தவர்களும் இலங்கையில் உண்டு. இலங்கையில் அரசு சார்ந்த பல வழிபாடுகளும் புத்த மதம் சார்ந்தே இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அரசு பொறுப்புகளில் பதவி ஏற்பு நிகழ்ச்சிகளில் புத்த மதம் சார்ந்த துறவிகள் பங்கேற்பது இலங்கையில் வழமையான ஒன்று. இந்நிலையில்
 

இலங்கையில் பெரும்பான்மையோர் பின்பற்றும் மதம் புத்தம். 2012 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையில் 70 சதவிகித பேர் புத்த மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள். இது தவிர, சைவம், இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்தவர்களும் இலங்கையில் உண்டு.  

இலங்கையில் அரசு சார்ந்த பல வழிபாடுகளும் புத்த மதம் சார்ந்தே இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அரசு பொறுப்புகளில் பதவி ஏற்பு நிகழ்ச்சிகளில் புத்த மதம் சார்ந்த துறவிகள் பங்கேற்பது இலங்கையில் வழமையான ஒன்று.

இந்நிலையில் புத்தர் உருவம் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த சேலையை ஒரு பெண்மணி கட்டியிருந்தார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் அந்தப் பெண்மணி. அவர் மருத்துவச்சிகிச்சைக்காக நாரேஹன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் புத்தர் உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட சேலையைக் கட்டியிருந்தார்.

அதைப் பார்த்த மருத்துமனை ஊழியர்கள், காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல் துறையினர், ‘குறிப்பிட்ட மதத்தை அவமரியாதை செய்யும் செயல் இது என்று’ அந்தப் பெண்மணியைக் கைது செய்தனர்.

அந்தப் பெண்மணியின் மேற்கொண்டு விசாரணையை மேற்கொண்டனர் காவல் துறையினர். பின்பு, நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தியபோது நீதிமன்றம் அவருக்கு இலங்கை பணம் 1 லட்சம் ரூபாய் அளித்து சொந்த ஜாமீனில் செல்ல உத்தரவிட்டது.