×

’மாவீரர் தினம் நடத்த அனுமதி மறுப்பா?’ இலங்கையில் நடப்பது என்ன?

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை அளிப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டதுபோது முதலில் அமைதி வழியான போராட்டங்கள் நடந்தன. பின் ஆயுத வழிப் போராட்டங்களாக அவை மாறின. பல ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடின. அவற்றில் முதன்மையாகப் பார்ப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம். அந்த இயக்கத்தில் மரணித்தவர்களின் நினைவாக மாவீரர் தினம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27-ம் தேதி அனுசரிக்கப்படுவது வழக்கம். 2008-09 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு
 

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை அளிப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டதுபோது முதலில் அமைதி வழியான போராட்டங்கள் நடந்தன. பின் ஆயுத வழிப் போராட்டங்களாக அவை மாறின. பல ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடின. அவற்றில் முதன்மையாகப் பார்ப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம்.

அந்த இயக்கத்தில் மரணித்தவர்களின் நினைவாக மாவீரர் தினம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27-ம் தேதி அனுசரிக்கப்படுவது வழக்கம். 2008-09 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பில் செய்திகள் வெளியாகின. அந்த இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந்நிலையில் மாவீரர் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகளுக்கு அரசுத் தரப்பில் இடையூறு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், யாழ்ப்பாணப் பகுதியில் மாவீரர் அஞ்சலி செலுத்தும் இடத்திற்குச் சென்றிருக்கிறார். ஆனால், இலங்கையில் ராணுவத் தரப்பில் செல்வராஜா நிறுத்தப்பட்டு, மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுத்துள்ளனர். இதனால், ராணுவத்தினரோடு விவாதத்தில் ஈடுபட்டார்.

முல்லைத் தீவு பகுதியில் மாவீரர் துயிலும் இடங்களைச் சுத்தம் செய்து விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டபோது, அங்கே காவல் துறையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனராம்.

இதேபோல சில மாதங்களுக்கு திலீபன் நினைவேந்தல் நடத்தவும் இலங்கை காவல் துறை தரப்பில் இடையூறு தரப்பட்டதையும் குறிப்பிட வேண்டும்.