×

ஃபேஸ்புக் ஓனரை முந்திச்சென்ற பணக்காரர் யார் தெரியுமா?

ஃபேஸ்புக் உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு ஆப் என்றால் நிச்சயம் அது மிகையில்லை. ஏனெனில், உலகளவில் 2.45 பில்லியன் பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்கிறது ஒரு தரவு. எந்தவொரு பொருளையும் ஃபேஸ்புக் மூலம் விளம்பரப்படுத்துவது எளிதாக எங்கும் சேரும் எனும் நிலையை அது உருவாக்கி விட்டது. பல்வேறு வழிகளில் லாபம் பார்த்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், 35 வயதிலேயே உலகச் செல்வந்தர்களின் பட்டியலில் அதுவும் பத்து இடங்களில் இடம்பிடித்தார். இது உலகின் உள்ள
 

ஃபேஸ்புக் உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு ஆப் என்றால் நிச்சயம் அது மிகையில்லை. ஏனெனில், உலகளவில் 2.45 பில்லியன் பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்கிறது ஒரு தரவு. எந்தவொரு பொருளையும் ஃபேஸ்புக் மூலம் விளம்பரப்படுத்துவது எளிதாக எங்கும் சேரும் எனும் நிலையை அது உருவாக்கி விட்டது.

பல்வேறு வழிகளில் லாபம் பார்த்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், 35 வயதிலேயே உலகச் செல்வந்தர்களின் பட்டியலில் அதுவும் பத்து இடங்களில் இடம்பிடித்தார். இது உலகின் உள்ள பலரையும் வியக்க வைத்தது. ஏனெனில், அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லோருமே 50 வயதைக் கடந்தவர்கள்.

இந்நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்திச் சென்றிருக்கிறார் ஒருவர். ஸ்பேஸ் எக்ஸ் & டெஸ்லா கம்பெனியின் எலான் மஸ்க் என்பவரே ஃபேஸ்புக் ஓனரை முந்திச் சென்றது.

நேற்றைய நிலவரப்படி, எலான் மஸ்க்கின் கம்பெனி பங்குகள் ஏற்றம் கண்டன. இதனால், சுமார் 11 ஆயிரம் கோடிக்கும் அதிகம் வருமானம் அவரை வந்தடைந்தது. அதனால், அவரின் சொத்து 8 லட்சத்து 69 ஆயிரம் கோடியைக் கடந்தது. இதனால், அவரின் உலகப் பணக்காரர்கள் வரிசையில் ஜுக்கர்பெர்க்கை முந்திச் சென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார் எலான் மஸ்க்.

49 வயதான எலான் மஸ்க், சவுத் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 2002 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்க குடிமகன் உரிமையைப் பெற்றவர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை 18 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர். அதன் தலைமையிடம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. 8,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகிறார்கள்.