×

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்: முதியவர்களை அன்புடனும் நீதியுடனும் நடத்துங்கள்!

இன்று உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. வயதானவர்களை வன்கொடுமை செய்வது மற்றும் புறக்கணிப்பது போன்ற செயல்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த தினம் நடத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தீர்மானத்தின்படி 2011 டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்ட பின்னர் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதியோர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சர்வதேச நெட்வொர்க் ஜூன் 2006 இல் முதன்முதலில் நினைவுகூரலை நிறுவக் கோரியதைத்
 

இன்று உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

வயதானவர்களை வன்கொடுமை செய்வது மற்றும் புறக்கணிப்பது போன்ற செயல்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த தினம் நடத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தீர்மானத்தின்படி 2011 டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்ட பின்னர் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதியோர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சர்வதேச நெட்வொர்க் ஜூன் 2006 இல் முதன்முதலில் நினைவுகூரலை நிறுவக் கோரியதைத் தொடர்ந்து இந்த முன்மொழிவு படத்தில் வந்தது.

உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தின் தீம் “குரல்களை உயர்த்துங்கள்” (Lifting Up Voices) என்பதாகும். வயதானவர்களிடம் தவறாக நடந்து கொள்வது என்பது உலகில் மிகக் குறைவாக கண்டுகொள்ளப்பட்டு வரும் ஒரு குற்றமாகும். ஆனால் காலங்கள் மாறும்போது, இந்த குற்றங்கள் குறித்து மக்கள் இடையே நிறைய கவன ஈர்ப்பு பெறப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடி முதியோர் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் தினமாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதியவர்களை வன்கொடுமை செய்வது உலகளாவிய சமூகப் பிரச்சினையாகும். இது வயதானவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அத்துடன் கோடிக்கணக்கான வயதானவர்களின் உரிமைகளையும் நசுக்குகிறது என்பதே நிதர்சனம்!