×

`முறையாக விசாரணை நடத்தப்படணும்!’- சர்வதேச கவனத்தை ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்

“சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணங்கள் தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார் ” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

“சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணங்கள் தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார் ” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன் உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வந்த நிலையில், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. சிபிஐயும் தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

இதனிடையே, சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற மரணங்கள் தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார் ” என்று கூறினார்.