அமெரிக்காவில் வால்மார்ட் விநியோக மையத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி, நால்வர் காயம்
கலிபோர்னியா: வால்மார்ட் விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். கலிபோர்னியாவில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ரெட் பிளஃப் நகரில் உள்ள ஒரு மையத்தில் இருந்து செமி-ஆட்டோமேட்டிக் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். துப்பாக்கியால் சுட்டவரும் மற்றொருவரால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு
Jun 28, 2020, 11:35 IST
கலிபோர்னியா: வால்மார்ட் விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
கலிபோர்னியாவில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ரெட் பிளஃப் நகரில் உள்ள ஒரு மையத்தில் இருந்து செமி-ஆட்டோமேட்டிக் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். துப்பாக்கியால் சுட்டவரும் மற்றொருவரால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.