×

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! சரிந்து விழுந்த கட்டடம்!!

துருக்கி அருகே உள்ள ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டங்கள் சேதம் அடைந்ததுள்ளதாகவும், இடிபாடுகளுக்கு இடையில் மக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து அலறியபடி தெருக்களுக்கு ஓடிம் வீடியோவும் நெஞ்சை உருக்குகிறது. மத்திய இஷ்மீர் பகுதியில் பலமாடிக்கட்டடம் இடிந்து தரைமட்டமாக
 

துருக்கி அருகே உள்ள ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டங்கள் சேதம் அடைந்ததுள்ளதாகவும், இடிபாடுகளுக்கு இடையில் மக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து அலறியபடி தெருக்களுக்கு ஓடிம் வீடியோவும் நெஞ்சை உருக்குகிறது. மத்திய இஷ்மீர் பகுதியில் பலமாடிக்கட்டடம் இடிந்து தரைமட்டமாக மாறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. கட்டடம் சரிந்து விழுந்ததால் நகரத்தின் பல பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளிக்கின்றன. கட்டடங்களில் பலர் சிக்கியிருக்கலாம் என துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோயுலு தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை உயிரிழப்பு மற்றும் சேதங்கள் பற்றிய தகவல் வெளிவரவில்லை.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிலநடுக்கம் காரணமாக கடல்பகுதியில் சுனாமி ஏற்பட்டு ஏகன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. தொடர்ந்து பல்கேரியா, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.