ரஷ்யாவில் நிலநடுக்கம் : 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!! ஹவாய் தீவில் துறைமுகங்கள் மூசல்..
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 என்கிற அளவில் மிக சக்திவாய்ந்ததாக பதிவாகியுள்ளது. இதனைதொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரஷ்யாவில் உணரப்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, பசுபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஹவாய் தீவில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு துறைமுகங்கள் மூடப்பட்டிருக்கின்றன.
மேலும், ஹவாய் தீவை தொடர்ந்து அலாஸ்காத்திவிலும் சுனாமி தாக்கியுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளையும் சுனாமியை தாக்கிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 16 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, ஈகுவடார், பெரு, பிரெஞ்சு, பாலினேசியா, குவாம், கோஸ்டாரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாடன இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி தாக்கியதை தொடர்ந்து ஹவாய் தீவில் விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ரஷ்யாவில் உள்ள கட்டிடங்கள், மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், சுனாமி எச்சரிக்கை எடுத்து ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.