×

ட்ரம்ப்பை நோக்கி சரமாரியாக பாய்ந்த 8 தோட்டாக்கள்- துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்?

 

அமெரிக்க அதிபர் டானல்டு டிரம்ப் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடீரென பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில்  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 8 தோட்டாக்கள் அடுத்தடுத்து பாய்ந்த நிலையில், நல்வாய்ப்பாக அதிபர் ட்ரம்ப் உயிர்தப்பினார். பாதுகாப்பு படையினர் அவரை சூழ்ந்து கொண்டு டிரம்பையும் அவரது மனைவியையும் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறுகையில், “பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கைக்கு பாராட்டு, அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளனர். சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர். பாதுகாப்புப் படையினரின் துணிச்சலுக்கு நன்றி. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வாஷிங்டனில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. 2 ஆண்டுக்கு முன்பும் என் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஒரு அதிகாரிக்கு காயம் ஏற்பட்டாலும், அவர் நல்ல நிலையில் இருக்கிறார். சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளால் நாங்கள் விரைவாக வெளியேற்றப்பட்டோம். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.