×

2.84 கோடியை எட்டியது மொத்த எண்ணிக்கை – உலகளவில் கொரோனா நிலவரம்

கொரோனா வினா ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகர்த்த வண்ணம் இருக்கிறது. இந்தியா, பிரேசில், அமெரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே உள்ளது. உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இது பெரும் ஆபத்தான சூழல். செப்டம்பர் 12-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2
 

கொரோனா வினா ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகர்த்த வண்ணம் இருக்கிறது. இந்தியா, பிரேசில், அமெரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே உள்ளது.

உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இது பெரும் ஆபத்தான சூழல்.

செப்டம்பர் 12-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 84 லட்சத்து  29 ஆயிரத்து 498 பேர்.    

 கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 14 ஆயிரத்து 219 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 66,636,247 பேரும், இந்தியாவில் 46,59,984 பேரும், பிரேசில் நாட்டில்  42,83,978 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பிரேசிலை விட மிக விரைவாக இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் இந்தியாவில் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்காவின் எண்ணிக்கையையும் கடந்துவிட வாய்ப்பு இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.