×

40 லட்சத்தைக் கடந்த இரண்டாம் நாடு இதுதான்! #CoronaUpdate

கொரொனாவினா கடும்பாதிப்பு அடைந்த நாடுகள் அதிலிருந்து மீள்வதற்கு கடும் போராட்டத்தை செய்துவருகின்றன. அமெரிக்காவின் ஊடகங்கள் முழுக்க கொரோனா வைரஸ் பரவல் பற்றிய செய்திகளே நிரம்பியிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 62 லட்சத்து 86 ஆயிரத்து 532 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 85 லட்சத்து 30 ஆயிரத்து 939 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8
 

கொரொனாவினா கடும்பாதிப்பு அடைந்த நாடுகள் அதிலிருந்து மீள்வதற்கு கடும் போராட்டத்தை செய்துவருகின்றன. அமெரிக்காவின் ஊடகங்கள் முழுக்க கொரோனா வைரஸ் பரவல் பற்றிய செய்திகளே நிரம்பியிருக்கின்றன.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 62 லட்சத்து  86 ஆயிரத்து 532 பேர்.

  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 85 லட்சத்து 30 ஆயிரத்து 939 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 69 ஆயிரத்து 204 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவைதான் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் அமெரிக்கா 63,10,783 நோய் பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்து இருக்கும் பிரேசிலில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தைக் கடந்துவிட்டது.

இன்றைய மாலை நேர நிலவரப்படி, 40 லட்சத்து ஆயிரத்து 422 பேர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 899 பேர் இறந்துவிட்டனர். கடந்த சில நாட்களாக பிரேசிலில் கொரோனா நோய்த் தொற்றால் புதிய நோயாளிகள் அதிகரிப்பது ஒரு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது.