×

நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்பிடித்த கேரள பெண் இவர்தான்!

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆட்ர்டென் உலகளவில் கவனம் ஈர்த்தவர். கொரோனா தொற்று உலகம் முழுவதுமே படாத பாடு படுத்தி வருகிறது. ஆனால், நியூசிலாந்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதுமே உஷாரானவர். உடனடியாக லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, யாருக்கு கொரோனா தொற்ரு இருக்கிறதோ அவரைப் பற்றிய தகவல்கள் ட்ரேஸ் செய்யப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்ய வைத்தார். இதனால், அங்கு இப்போதுமே கொரோனா கட்டுக்குள்தான் இருக்கிறது. கொரோனா பரவலால் தள்ளிப்போன தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் மாபெரும் வெற்றிப்பெற்று
 

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆட்ர்டென் உலகளவில் கவனம் ஈர்த்தவர். கொரோனா தொற்று உலகம் முழுவதுமே படாத பாடு படுத்தி வருகிறது. ஆனால், நியூசிலாந்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதுமே உஷாரானவர். உடனடியாக லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, யாருக்கு கொரோனா தொற்ரு இருக்கிறதோ அவரைப் பற்றிய தகவல்கள் ட்ரேஸ் செய்யப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்ய வைத்தார். இதனால், அங்கு இப்போதுமே கொரோனா கட்டுக்குள்தான் இருக்கிறது.

கொரோனா பரவலால் தள்ளிப்போன தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் மாபெரும் வெற்றிப்பெற்று மீண்டும் நியூசிலாந்தின் பிரதமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஜெசிந்தா. அவர் சில நாட்களுக்கு முன் தனது அமைச்சர் அவை பட்டியலை அறிவித்தார். அதில், இந்திய வம்சாவளி ஒருவர் முதன்முறையாக இடம்பெற்றார். அவர்தான் பிரியங்கா ராதாகிருஷ்ணன்.

பிரியங்கா ராதாகிருஷ்ணனின் பூர்வீகம் இந்தியாவிலுள்ள கேரளாதான். ஆனால், இவர் பிறந்தது சென்னையில், வளர்ந்தது படித்தது சிங்கப்பூரில். அவர் மேல்படிப்புக்காக நியூசிலாந்துக்குச் சென்றார். அங்கு அறிமுகமானவர்தான் ரிச்சர்ட்சனைத் திருமணம் செய்துகொண்டார்.

இயல்பாகவே அரசியலில் ஆர்வம் கொண்ட பிரியங்காவுக்கு நியூசிலாந்து அரசியல் நாகரிகச் சூழல் ரொம்பவே பிடித்துவிட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே நியூசிலாந்து லேபர் பார்ட்டியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். சென்ற முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அதில் அவர் உழைப்பின் மீது மதிப்பு கொண்ட ஜெசிந்தா, இம்முறை வெல்லும்போது பிரியங்காவை அமைச்சராக்கி உள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் பத்தாவது சமூகம் மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராக வரும் 6-ம் தேதி பதவியேற்க உள்ளார் பிரியங்கா. நியூசிலாந்தில் செட்டில் ஆனாலும் இந்தியாவில் பழக்க வழக்கங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பார்த்தால் அனைத்து விழாக்களிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட போட்டோக்களைக் காண முடியும். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா புடவைக் கட்டியப்படி இவரோடு சேர்ந்து எடுத்திருக்கும் போட்டோ எல்லோரையும் ஈர்த்த ஒன்று.