×

5 வாரங்களுக்கு லாக்டெளன் அறிவித்த நாடு இதுதான்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 663 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 18 லட்சத்து 19 ஆயிரத்து 551 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 41 ஆயிரத்து 741 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,03,48,449 பேர். பல நாடுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறது. அதன்படி,
 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 663 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 18 லட்சத்து 19 ஆயிரத்து 551 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 41 ஆயிரத்து 741 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,03,48,449 பேர்.

பல நாடுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறது. அதன்படி, முதலில் கடைப்பிடிப்பது லாக்டெளன் அறிவிப்பதுதான். அதன்மூலம், மக்கள் வீட்டுக்குள் முடங்கும்போது கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படுகிறது.

கொரோனாவால் குறிப்பிட்ட அளவு பாதிப்பைச் சந்தித்து வரும் நாடு நெதர்லாந்து. இந்நாட்டில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 6,28,577 பேர். இவர்களில் 10,168 பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்து விட்டனர்.

செப்டம்பர் மாத இறுதிவரை குறைவான அளவு அதிகரித்த் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அக்டோபரில் மளமளவென அதிகரித்தது. அக்டோபர் 30-ம் தேதியன்று ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் புதிய நோயாளிகளாக கண்டறியப்பட்டனர். இதே நிலை ஏறியும் இறங்கியும் வருகிறது.

இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஐந்து வாரங்களுக்கு கடுமையான விதிமுறைகளோடு லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த லாக்டெளன் காலத்தில் தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு முழுக்க விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நெதர்லாந்தைப் போல பல நாடுகளும் இம்மாதிரியான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.