×

“என் கணவரை படுகொலை செய்தவர்களை கருவறுக்க வேண்டும்” – ஹைட்டி அதிபர் மனைவி சூளுரை!

கரிபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோஸ் ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத நபர்களால் அவரது இல்லத்தில் ஜூலை 7ஆம் தேது படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி மார்ட்டின் மேரி எட்டியென் ஜோசப்பையும் கொலையாளிகள் சுட்டிருக்கின்றனர். படுகாயமடைந்த அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உயிருடன் மீண்டிருக்கிறார். இந்தக் கொலை தொடர்பாக 28 பேர் கொண்ட வெளிநாட்டுக் கூலிப்படையை ஹைதி போலீஸார் கைது செய்தனர்.
 

கரிபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோஸ் ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத நபர்களால் அவரது இல்லத்தில் ஜூலை 7ஆம் தேது படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி மார்ட்டின் மேரி எட்டியென் ஜோசப்பையும் கொலையாளிகள் சுட்டிருக்கின்றனர். படுகாயமடைந்த அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உயிருடன் மீண்டிருக்கிறார்.

இந்தக் கொலை தொடர்பாக 28 பேர் கொண்ட வெளிநாட்டுக் கூலிப்படையை ஹைதி போலீஸார் கைது செய்தனர். இதில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் ஹைட்டி அமெரிக்கர்கள் எனவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்தக் கொலையில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட முக்கிய குற்றவாவாளியான கிறிஸ்டியன் இம்மானுவேல் சனோன் என்பவரையும் ஹைட்டி போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சூழலில் சிகிச்சையிலிருந்து வந்தபிறகு முதல் முறையாக ஹைட்டி அதிபரின் மனைவி மார்ட்டின் மோஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “என் கணவரைக் கொன்றவர்கள் என் மீதும் தாக்குதல் நடத்தினர். நான் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தேன். ஆனால் அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்து என்னைக் கொல்லாமல் அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர். இந்தப் பயங்கரவாதக் குழுக்களும், ஹைட்டி அரசின் அமைப்பும்தான் என் கணவரைக் கொன்றன. எங்கள் பாதுகாப்புக்காக சுமார் 30 – 50 பாதுகாவலர்கள் இருந்தனர்.

அவர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. சின்ன காயம் கூட அவர்களுக்கு ஏற்படவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். என் கணவரைக் கொல்ல அவர்கள் தான் உடந்தையாக உள்ளார்கள். இதைச் செய்தவர்கள் பிடிபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இல்லையெனில் அவர்கள் அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அதிபரையும் கொன்றுவிடுவார்கள். அவர்கள் ஒரு முறை செய்துவிட்டார்கள். அவர்கள் அதை மீண்டும் செய்வார்கள்” என்றார்.