×

இத்தாலியில் 2 கிலோ கடற்கரை மணல் திருட்டு திருடியவருக்கு ரூ. 88 ஆயிரம் அபராதம் !

இத்தாலியில் இருந்து 2 கிலோ பீச் மணலை எடுத்துச்சென்ற பிரான்ஸ் நாட்டு சுற்றுலாவாசிக்கு, 88 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள சார்தீனியா தீவில் உள்ள கடற்கரைகளில் காணப்படும் வெள்ளை மணல் உலகளவில் பிரபலம். இதன் காரணமாக அங்குள்ள கடல் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இதன் அழகை காண பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். வெள்ளை மணலுக்கு இருக்கும் மவசு காரணமாக அந்நாட்டில் அந்த வெள்ளை
 

இத்தாலியில் இருந்து 2 கிலோ பீச் மணலை எடுத்துச்சென்ற பிரான்ஸ் நாட்டு சுற்றுலாவாசிக்கு, 88 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள சார்தீனியா தீவில் உள்ள கடற்கரைகளில் காணப்படும் வெள்ளை மணல் உலகளவில் பிரபலம். இதன் காரணமாக அங்குள்ள கடல் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இதன் அழகை காண பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

வெள்ளை மணலுக்கு இருக்கும் மவசு காரணமாக அந்நாட்டில் அந்த வெள்ளை மணலை எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு சுற்றுலா வந்திருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா வாசி ஒருவர், 2 கிலோ வெள்ளை மணலை ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்து சென்றுள்ளார்.

அங்குள்ள காகிலியாரி எல்மாஸ் விமான நிலையத்தில் அவரை பரிசோதித்தபோது அவரிடம் வெள்ளை மணல் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவருக்கு 1200 டாலர் ( இந்திய மதிப்பில் 88 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தனர்.