×

‘இரண்டாம் முறை வெற்றிபெற ஒரே காரணம்தான்’ நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

உலகின் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவியேற்றவர் எனும் பெருமைக்கு உரியவர் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். அவர் பதவியேற்றபோது வயது 37. நியூசிலாந்து நாட்டில், லேபர் கட்சி மக்களிடம் செல்வாக்கு குறைந்து, தேர்தல்களில் வாக்கு வங்கி சரிவை கண்ட நிலையில் அதன் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்படி இக்கட்டான நிலையில் லேபர் கட்சியின் தலைமை பொறுப்பேற்ற ஜெசிந்தா, தேர்தலில் வென்று பிரதமராகவும் ஆனார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா
 

உலகின் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவியேற்றவர் எனும் பெருமைக்கு உரியவர் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். அவர் பதவியேற்றபோது வயது 37.

நியூசிலாந்து நாட்டில், லேபர் கட்சி மக்களிடம் செல்வாக்கு குறைந்து, தேர்தல்களில் வாக்கு வங்கி சரிவை கண்ட நிலையில் அதன் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்படி இக்கட்டான நிலையில் லேபர் கட்சியின் தலைமை பொறுப்பேற்ற ஜெசிந்தா, தேர்தலில் வென்று பிரதமராகவும் ஆனார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இப்போது வரை புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால், நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு தெரிந்த உடனே உஷாரான பிரதமர் ஜெசிந்தா, தற்காப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார். 100 நாட்களில் ஒருவர்கூட புதிய நோயாளி இல்லை எனும் நிலையைக் கொண்டு வந்தார். மீண்டும் ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் துரிதமாகச் செயல்பாடு அது மேலும் பரவாமல் தடுத்தார்.

நியூசிலாந்தில் தற்போதைய நிலையில், கொரோனாவின் மொத்த பாதிப்பு 1,886 பேர். அவர்களில் குணமடைந்தவர்கள் 1,824 பேர். மரணம் அடைந்தவர்கள் 25 பேர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே.

கொரோனாவின் காரணமாக தேர்தலை ஒத்தி வைத்தார் ஜெசிந்தா. ஆனால், எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. நிலைமை சற்று இயல்புக்குத் திரும்பியவம் நியூசிலாந்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அமோக வெற்றிப் பெற்று மீண்டும் பிரதமராகி உள்ளார் ஜெசிந்தா.

தனது வெற்றியைப் பற்றி பேசுகையில், ”கொரோனா பரவலைத் தடுத்ததும், அதற்கு உரிய பணிகளைத் துரிதமாக முன்னெடுத்த காரணத்தாலே மக்கள் எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.