×

’எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை’ பிரேசில் அதிபரின் மனைவி

56,12,027 பேர் இன்று காலையை நிலவரப்படி பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை. உலகளவில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 20 லட்சத்து 49 ஆயிரத்து 452 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 7 நாட்களுக்குள் 20 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 77 ஆயிரத்து 440 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே
 

56,12,027 பேர் இன்று காலையை நிலவரப்படி பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை. உலகளவில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 20 லட்சத்து  49 ஆயிரத்து 452 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 7 நாட்களுக்குள் 20 லட்சம் அதிகரித்து விட்டது.

Blood sample tube positive with COVID-19 or novel coronavirus 2019 found in Wuhan, China

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 77 ஆயிரத்து 440 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  

பிரேசிலில் கொரொனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது.

அந்த நாட்டின் அதிபர்  ஜெயீர் போல்சனாரோ, தனக்கான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியத்துடன் இருந்தார். அதனால், கடந்த மாதம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாது.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டார் அதிபர். அடுத்து அவரின் மனைவி மிச்சேல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது அவரும் சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்றார்.

இது குறித்து அவர், தனக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.