×

விஞ்ஞானியைக் கொன்ற தீவிரவாதிகள் – ஈரானில் நடந்த கொடூரம்

ஈரான் நாட்டைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் ஈரானிய ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர். ஈரானின் மரியாதை மிகுந்த விஞ்ஞானியாகப் போற்றப்படுபவர் மெஹ்சென். உலக நாடுகளிலும் மதிப்பு நிறைந்தவர். அவருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்கெனவே இருந்தது. அதனால், அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. நேற்று ஈரானிய தலைநகரான தெஹ்ரானில் மெஹ்சென் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, யார்
 

ஈரான் நாட்டைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் ஈரானிய ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர்.

ஈரானின் மரியாதை மிகுந்த விஞ்ஞானியாகப் போற்றப்படுபவர் மெஹ்சென். உலக நாடுகளிலும் மதிப்பு நிறைந்தவர். அவருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்கெனவே இருந்தது. அதனால், அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று ஈரானிய தலைநகரான தெஹ்ரானில் மெஹ்சென் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, யார் என அடையாளம் காண முடியாத சிலர் வெடிகுண்டுகள் மூலம் அவர் கார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

மேலும், பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதலும் நடத்தியிருக்கின்றனர். அதனால், படுகாயம் அடைந்த விஞ்ஞானி மெஹ்செனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டார்.

இந்தத் தீவரவாத தாக்குதலுக்கு யார் என்று விசாரனை நடைபெற்றுவருகிறது. இந்தக் கோழைத்தனமாக செயலுக்கு நிச்சயம் பதிலடி காத்திருக்கிறது என்று ஈரானிய ராணுவத் தளபதி எச்சரிக்கை கூறியுள்ளார்.