×

நியூ கலிடோனியா தீவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

 

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூ கலிடோனியா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்ட நிலையில், இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நியூ கலிடோனியா தீவு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும்.  இதன் தலைநகரம் நூமியா ஆகும். இந்நிலையில், நியூ கலிடோனியா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில்  7.7 ஆக பதிவாகியுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து உள்ளது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து நியூ கலிடோனியா மற்றும் பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.  இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.