×

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- தொழுகை செய்துகொண்டிருந்த 31 பேர் பலி

 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது. விசாரணையில் இஸ்லாமாபாத்தில் நடந்தது மனித வெடிகுண்டு தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மசூதியில் தொழுகையின்போது நடந்த தாக்குதலில் 169 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது தற்கொலைப் படை தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.