×

காற்று பலமாக வீசியதால் இந்தியாவில் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்!

நிவர் புயல் குறித்த அப்டேட் செய்திகள் வந்துகொண்டே உள்ளன. நாளை இப்புயல் காரைக்கல் – மாமல்லபுரம் இடையே கரை கடக்கும் என தெரிகிறது. இதனால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. புயலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்களே. இன்றும் பலர் கடலில் தவித்துக்கொண்டிருக்கலாம். அப்படி இலங்கையில் மீன் பிடித்த ஒருவர் இந்திய கரையோரம் ஒதுங்கியிருக்கிறார். இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியின் வல்வெட்டித் துறையை சேர்ந்தவர் மீனவர் விஜயமூர்த்தி. இவர் நேற்று கடலில் மீன் பிடிக்க படகில் வலையோடு
 

நிவர் புயல் குறித்த அப்டேட் செய்திகள் வந்துகொண்டே உள்ளன. நாளை இப்புயல் காரைக்கல் – மாமல்லபுரம் இடையே கரை கடக்கும் என தெரிகிறது. இதனால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

புயலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்களே. இன்றும் பலர் கடலில் தவித்துக்கொண்டிருக்கலாம். அப்படி இலங்கையில் மீன் பிடித்த ஒருவர் இந்திய கரையோரம் ஒதுங்கியிருக்கிறார்.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியின் வல்வெட்டித் துறையை சேர்ந்தவர் மீனவர் விஜயமூர்த்தி. இவர் நேற்று கடலில் மீன் பிடிக்க படகில் வலையோடு சென்றிருக்கிறார். அப்போது, காற்று பலமாக வீச, படகை நிறுத்த முடியாமல் காற்றின் வேகத்திற்கும் அதன் திசையிலும் செலுத்தியிருக்கிறார்.

அந்தப் படகோடு விஜயமூர்த்தி இந்தியாவின் நாலுவேதபதி பகுதியில் கரை ஒதுங்கியிருக்கிறார். அவரிடம் வலைகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற புயல் நேரங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்ப்பார்கள்.

சில மீனவர்கள் புயல் எச்சரிக்கை வருவதற்கு முன் கடலுக்குள் சென்றிருப்பார்கள். அவ்வாறான மீனவர்களே புயலில் சிக்கி மாட்டிக்கொள்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த இந்த மீனவரும் அப்படித்தான் மாட்டியிருக்கிறார்.